பல கோடி இந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நட்சத்திர நாயகரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படமாக தயாராகவுள்ள AK62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இதனிடையே இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, ஜான் கொக்கென், சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில் துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜான் கொக்கெனுக்கு சண்டைக் காட்சிகளுக்கான பிரத்தியேக பாதுகாப்பு உடையை அஜித் குமார் பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து நடிகர் ஜான் கொக்கென் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சூப்பர் ஹீரோ பரிசாக கொடுத்த என்னுடைய சூப்பர் பவர் சண்டை பாதுகாப்பு கவச உடை… நன்றி அஜித் சார்" என பதிவிட்டு அந்த கவச உடையை அணிந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…