தனக்கே உரித்தான கலகலப்பான பேச்சால் முன்னணி ரேடியோ வர்ணனையாளராக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த பாலாஜி தொடர்ந்து நடிகராகவும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக இவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளிவர தயாராகி வருகிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து RJபாலாஜி புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, பர்ஹானா, இடம் பொருள் ஏவல், மாணிக் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்துள்ள RJ.பாலாஜியின் முதல் த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த புதிய படத்திற்கு ரன் பேபி ரன் என பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் ரன் பேபி ரன் திரைப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவா ஒளிப்பதிவு செய்யும் ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்கிறார். RJ.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் & விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த (2022) மார்ச் மாதம் ரன் பேபி ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட ரன் பேபி ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரன் பேபி ரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாக்கியுள்ளது. அதிரடியான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…