குடும்பங்கள் கொண்டாடும் கதை மற்றும் நகைச்சுவை டிராக் கதையையும் கொடுத்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற ஆர்ஜே பாலாஜி முதல் முதலில் திரில்லர் கதையை தேர்ந்தேடுத்து நடித்துள்ள திரைப்படம் ‘ரன் பேபி ரன்’ பிரின்ஸ் பிக்சர் தயாரித்த இப்படத்தை இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தொடர்ந்து இரண்டு வாரங்களாக மக்களின் ஆதரவை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ரன் பேபி ரன் இன்றுடன் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் ரன் பேபி ரன் படக்குழுவினரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக ரன் பேபி ரன் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் , வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது ரன் பேபி திரைப்படம். சர்தார் பிளாக்பஸ்டர் தொடர்ந்து எங்களுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது. இதை சத்தியப்படுத்தியதற்கு ரசிகர்களுக்கு நன்றி மேலும் படக்குழுவினருக்கும் நன்றி என்று தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து ரன் பேபி ரன் படத்தின் கதாநாயகன் ஆர் ஜே பாலாஜி ரன் திரைப்படத்தின் வரவேற்பையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி. அதில்,

4 out of 4 !

Aunty, Uncle, தம்பி, தங்கச்சி,
and my dear பச்சசட்ட…

I love you ❤️#RunBabyRun pic.twitter.com/riI9MhHBdT

— RJ Balaji (@RJ_Balaji) February 17, 2023

“ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு படங்களிலும் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முழு முயற்சிகளையும் மேற்கொள்கிறேன். அது 'ரன் பேபி ரன்' திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்தை தேர்வு செய்யும் போது, எனது மனதில் இரண்டு விஷயங்களில் தோன்றும் அதில் நான் கவனமாக இருப்பேன்.ஒன்று, படத்தை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்கள் திருப்தியடைய வேண்டும். இரண்டு - அந்த படத்தின் மூலம் தயாரிப்பாளரும் லாபம் ஈட்ட வேண்டும்‌. நான் ஒரு படங்களுக்கு பின் இன்னொரு படம் செய்வதற்காக எடுத்து கொள்ள தாமதத்திற்கு இதுதான் காரணம்.அதன்படிதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் நான்கு படங்கள் மட்டுமே செய்துள்ளேன்.

ரன் பேபி ரன் எனக்கு மிகவும் வித்தியாசமான படம். எனக்கு வசதியான நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு தளத்திலிருந்து விலகி வந்துள்ள படம் இது. இந்த படத்தில் குறைந்தபட்ச உரையாடல்கள் மற்றும் மிகவும் இணக்கமான உடல் மொழியுடன் த்ரில்லர் படத்தில் நடிப்பதில் நிறைய தயக்கமும் தடையும் எனக்குள் இருந்தது. கடந்த காலங்களில் ஒரு நடிகரின் மாற்றங்களை பார்வையாளர்கள் முழுதும் ஏற்றக்கொள்ளாமல் போனது எனக்கு தயக்கம் கொடுத்தது. ஆனால் அதையும் மீறி இப்படத்தில் சீரியஸாக நடித்த என்னையும் திரில்லர் படமான ரன் பேபி ரன் படத்தையும் மறக்கமுடியாத மதிக்கதக்க படமாக மாற்றியதற்கு உங்களுக்கு நன்றி!

எனது முந்தைய படங்களான 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விஷேஷம்' ஆகிய படங்களுக்கு கிடைத்த அதே அளவு மகிழ்ச்சியையும் திருப்தியையும், தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையும் தந்திருப்பதில் நானும் எனது குழுவினரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் வரும் காலத்தில் பல்வேறு வகையான வித்யாசமான படங்களில் நடிக்க நம்பிக்கை கிடைத்துள்ளது. இப்படத்தை சாத்தியமாக்கிய எனது இயக்குனர் ஜியன் கிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் திரு. லக்ஷ்மன், திரு வெங்கேடேஷ் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரன் பேபி ரன் குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இறுதியாக Aunty, Uncle பச்சை சட்டை, எல்.கே.ஜி முதல் ரன் பேபி ரன் வரை என எனது நான்கு படங்களும் வெற்றி பெற்றுள்ளதை தெரிவித்து கொள்கிறேன். இந்த தருணத்தில் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என்னை இப்படி உணர வைத்ததற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எல்லாவற்றையும் சாத்தியமாக்கியது. நன்றி.. மேலும் கடினமாக உழைத்து வருங்காலத்தில் உங்களுக்கு பிடித்ஊ படங்களைத் தருவேன் என்று உறுதியளிக்கிறேன். விரைவில் எனது அடுத்த படமான 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்துடன் திரையரங்குகளில் சந்திப்போம். என்று தெரிவித்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தற்போது இந்த அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.