ரசிகர்களுடன் ஸ்வீட்டான செய்தியை பகிர்ந்த சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா! குவியும் வாழ்த்துகள்

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவுக்கு ஆண் குழந்தை,super singer ajay krishna blessed with baby boy prathimma jessy | Galatta

விஜய் தொலைக்காட்சியின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த நவம்பர் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. நல்ல நல்ல திறமைகளை தேர்ந்தெடுத்து உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இருந்து எக்கச்சக்கமான பாடகர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமாக தமிழ் திரை இசை உலகில் பாடகர்களாக நுழைந்தனர். அந்த வகையில் நிகில் மேத்யூ, அனிதா, அஜீஷ், சாய்சரண், சத்திய பிரகாஷ், மாளவிகா, சந்தோஷ், திவாகர், ஆனந்த் அரவிந்தாக்ஷன் பிரியங்கா, ஹரிப்ரியா,சவுந்தர்யா,, ரக்ஷிதா, ஸ்ரீகாந்த், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ஷாம் விஷால், ரோஷினி உள்ளிட்ட பலர் தற்போது தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் மூலமாக தமிழ் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமடைந்தவர் பாடகர் அஜய் கிருஷ்ணா. தனக்கென தனி ஸ்டைலில் தொடர்ந்து பல பாடல்கள் பாடிவரும் அஜய் கிருஷ்ணா தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியிலும் பின்னணி பாடகராக கலக்கி வருகிறார். குறிப்பாக இந்திய சினிமாவில் பலருக்கும் ஃபேவரட் பாடகர்களில் ஒருவரான பாடகர் உதித் நாராயணன் போல அச்சு அசலாக அதே குரலில் பாடும் திறமை கொண்ட அஜய் கிருஷ்ணா அந்த வகையில் பாடக்கூடிய ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. உதித் நாராயணன் பாடிய பாடல்கள் மட்டுமல்லாது மற்ற பாடகர்கள் பாடிய பாடல்களை கூட உதித் நாராயணன் குரலில் பாடி அசத்துபவர் அஜய் கிருஷ்ணா.

முன்னதாக தனது நீண்ட நாள் காதலியான பிரதிம்மா ஜெஸ்ஸியை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் அஜய் கிருஷ்ணா திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கிய அஜய் கிருஷ்ணா - பிரதிம்மா ஜெஸ்ஸி ஜோடி விரைவில் பெற்றோர்களாக அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதை அறிவித்தனர். இதுகுறித்து பிரக்னன்சி போட்டோ ஷூட் புகைப்படங்களை, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “வாழ்க்கையின் புதிய பகுதியை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். பெற்றோர்கள் என்ற உலகிற்குள் நுழைய இருக்கும் எங்களுக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும் வேண்டுகிறோம்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட அஜய் கிருஷ்ணா - பிரதிம்மா ஜெஸ்ஸி ஜோடி மே மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஜனவரி 27 (2023 ஆம் ஆண்டு) ஓராண்டு நிறைவு செய்த போது தங்களது வளைகாப்பு நிகழ்ச்சியையும் கொண்டாடினர். இந்நிலையில் தற்போது பாடகர் அஜய் கிருஷ்ணா - பிரதிம்மா ஜெஸ்ஸி தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிப்ரவரி 12ஆம் தேதி எங்களுடைய மகன் பிறந்ததிலிருந்து அதிகாரப்பூர்வமாக நாங்கள் பெற்றோர்கள் ஆகியிருக்கிறோம். எங்கள் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் எக்கச்சக்கமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் நிறைய அன்பை எங்களை ஒரு குடும்பமாக மாற்றிய எங்களது குட்டி மனிதன் மீதும், காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். மக்களின் மனம் கவர்ந்த அஜய் கிருஷ்ணா தற்போது ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருப்பதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் அஜய் கிருஷ்ணா மற்றும் பிரதிம்மா ஜெஸ்ஸி தம்பதியினருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. பாடகர் அஜய் கிருஷ்ணா தனக்கு மகன் பிறந்த செய்தியை தெரிவித்த அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Jessy Ajay✨ (@prathimma_jessy)

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக வந்த அயலான் படத்தின் அட்டகாசமான அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமா

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக வந்த அயலான் படத்தின் அட்டகாசமான அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்

ஸ்காட்லாந்து பயணத்தில் கூலாக கார் ஓட்டும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ - புகைப்படங்கள் இதோ!
சினிமா

ஸ்காட்லாந்து பயணத்தில் கூலாக கார் ஓட்டும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ - புகைப்படங்கள் இதோ!

ரசிகர்கள் எதிர்பார்த்த தளபதி விஜயின் வாரிசு பட அடுத்த சர்ப்ரைஸ்... OTT ரிலீஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த தளபதி விஜயின் வாரிசு பட அடுத்த சர்ப்ரைஸ்... OTT ரிலீஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!