கொரோனாவுக்க எதிராகப் பிரதமர் மோடி விளக்கு ஏற்றச்சொன்ன நிலையில், பாஜக பெண் தலைவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்க எதிராக ஒற்றுமையுடன் தங்களது மகா சக்தியை வெளிப்படுத்தும் விதமாக, 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு, அனைவரும் தங்கள் வீடுகளில் எரியும் மின் விளக்குகளை அணைத்து விட்டு, வாசலில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி நாடு முழுவதும் நேற்று இரவு பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து, வீட்டு வாசலில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஒளியை ஏந்தி சுமார் 9 நிமிடங்கள் வரை நின்றனர். இதனால், நேற்று இரவு இந்தியா தீப ஒளியால் ஜொலித்தது.

அப்போது, பிரதமர் மோடியின் வேண்டுகோளைத் தவறாக புரிந்துகொண்ட பாஜக தொண்டர்கள் சிலர், பல இடங்களில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அப்படி, சென்னையில் நேற்று இரவு வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக, அப்பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் உள்ள பல குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

Video of BJP Mahila Ziladhyaksh Manju Tiwari from Balrampur firing in the air fs part of #9बजे9मिनट . Video uploaded from her own ID which went viral. #bjp #IndiaFightsCoronavirus @balrampurpolice pic.twitter.com/1PBPHMMA9G

— Amil Bhatnagar (@AmilwithanL) April 6, 2020

அதேபோல், வட மாநிலங்களில் சில பாஜக தொண்டர்கள் தீ பந்தத்தை ஏந்தியபடி நின்றனர். அதிலும் குறிப்பாக, உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணி தலைவி மஞ்சி திவாரி, தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து, வான் நோக்கிச் சுட்டு கொரோனாவுக்கு எதிராகத் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்த காட்சிகள் அனைத்தும், தற்போது வீடியோவாக வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பாஜக தலைவரின் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், போலீசார் மஞ்சி திவாரி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.