தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் வீரியம் பெற்றுள்ளது. இதனால், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரிகத்துக்கொண்டே வருகிறது. 

Corona kills 2 in Tamil Nadu

இந்தியாவில் 3,000 த்தை நெருங்கிய கொரோனா பாதிப்புக்கு, இதுவரை உயிரிழப்பு 68 ஆக அதிகரித்துள்ளது. 

அதன்படி, இந்தியாவிலேயே கொரோனா தாக்கம் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அங்கு கொரோனா பாதிப்ப எண்ணிக்கை தற்போது 500ஐ கடந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கொரோனாவல் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 411 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த மாதம் 25 ஆம் தேதி மதுரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் ஒருவர் தற்போது உயிரிழந்திருக்கிறார். இவர், டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனிடையே, கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.