அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு இரண்டரை நிமிடத்துக்கு ஒருவர் வீதம் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், சீனாவைக் காட்டிலும் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1200 பேர் வரை உயிரிழந்தள்ளனர்.

9 Thousand dead in US due to Corona

அதேபோல், அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல், வல்லரசு நாடானா அமரிக்காகக் கடுமையாக திணறி வருகிறது. 

அமெரிக்காவிலேயே அங்குள்ள நியூயார்க் மாகாணம் தான் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மாகாணத்தில் மட்டும், கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அந்த மாகாணத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 1.5  லட்சத்தை நெருங்கி வருகிறது.

குறிப்பாக, நியூயார்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 630 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

9 Thousand dead in US due to Corona

நியூயார்க் மாகாணத்தில் மட்டும் சராசரியாக, இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்து வருவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நியூயார்க் மக்கள் உயிர் பயத்தில் உரைந்து போய் உள்ளனர்.

அதே நேரத்தில், நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு இன்னும் ஒரு வாரத்தில், வரலாறு காணாத அளவில் அதிகரிக்கும் என்றும், அம்மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ கூறியுள்ளார்.

மேலும் நியூஜெர்சி, கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மிச்சிகன், பென்சில்வேனியா, மசாசுசெட்ஸ் ஆகிய மாகாணங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாகவும், இதனால், அந்தந்த மாகாணங்கள் கடுமையாகத் திணறி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.