டெல்லி விவசாய போராட்டம் 21 நாளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் பல போராட்டங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறது. திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். அமைதியை நிலைகுலைக்கிறார்கள் என்று போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பாரதிய கிசான் யூனியன் (அஸ்லி) மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் உழவர் தலைவர்களான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், சதேந்திர யாதவ், ரவுடாஸ் மற்றும் வீர் சிங் ஆகிய ஆறு பேருக்கு சம்பல் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 50 லட்ச ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஹயத்நகர் காவல் நிலையத்தில் இருந்து சில நபர்கள் விவசாயிகளைத் தூண்டுகிறார்கள், அவர்கள் அமைதியை நிலைகுலைக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் தலா 50 லட்சம் ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று சம்பல் மாவட்ட மாஜிஸ்திரேட் தீபேந்திர யாதவ் கூறியிருக்கிறார்.