இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் முதல்வர் அடிக்கல் நாட்டினர்

142 கோடி ரூபாய் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் வேலூரில் முதலைமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்

இலங்கை தமிழர் நலனுக்காக 3510 புதிய குடிருப்புகள் கட்டும் திட்டம் முதல்வர் வேலூரில் தொடங்கிவைத்தார் . வீடு கட்டி தருதல் கல்வி வேலைவாய்ப்பு , போன்ற அடிப்படை வசதி உள்ளிட்ட நலத்திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று முதலவர் மு.க . ஸ்டாலின் அறிவித்திருந்தார்

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 142 கோடி மதிப்பில் 3510 புதிய குடியிருப்புகள் காட்டப்டுள்ளது. இதை தவிர முகாம்களில் குடிநீர் வசதி சாலை மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட இதர வசதிகள் 30 கோடி ருபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார் 53 கோடி 51 லச்சம் மதிப்பில் பயணிகளுக்கு எரிவாயு இணைப்பு குடும்ப அட்டை மகளிர் உதவி குழு , நிதிஉதவி இளைங்கர்களுக்கு வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி போன்ற நலத்திட்டங்களை மு .க.ஸ்டாலின் வழங்கினார் .

அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஒரு அடையாளத்திற்காக மட்டுமே இலங்கை தமிழர்கள் என குறிப்பிடுவதாகவும், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் எனவும் கடல்தான் நம்மை பிரிக்கிறது நீங்கள் விட்ட கண்ணீர் தான் நம்மை இணைத்ததுஎனவும் குறிப்பிட்டார். தமிழர்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் திமுக. 1983-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியே தங்கினார்கள். 1997 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன் மூலம் இலங்கை தமிழர்கள் ஓரளவு பயன் அடைந்தார்கள். கடந்த 10 ஆண்டு அதிமுக அரசு இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் பற்றி எந்த கவலையும் படவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்".


110 விதியின் கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அறிவித்தேன். அதனை செயல்படுத்தும் நாள் இந்த நாள். அதற்காக பெருமைப்படுகிறேன். இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும், அவர்களுக்கான நலத் திட்டங்கள் மேலும் தொடரும் என்றும் கூறினார். இலங்கை தமிழர்களின் நலனுக்காக திமுக என்றும் துணை நிற்கும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார். இதை தொடர்ந்து மேல்மோணாவூர் இலங்கை தமிழர் குடியிருப்புகளை ஆய்வு செய்த முதலவர் அங்கு செய்யப்பட்ட வசதிகளை கேட்டறிந்தார்

இதையடுத்து, இலங்கை தமிழர்களின் முகாமிற்கு சென்ற முதலமைச்சர், அங்கு உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகாமிலுள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டார். அப்போது, முகாமில் வசிக்கும் இளைஞர்களுடன் சேர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.
இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் தி.மு.க. கதவை திறந்து வைத்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.