2020-21 ஆண்டுக்கான பட்ஜெட், தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு இன்று தொடங்கியது. அப்போது, நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதன்படி,
- திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

- உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாகப் பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- உயர் கல்வித்துறைக்கு 5,052 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- தொழில்துறைக்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- தகவல் தொழில் நுட்பத்துறைக்கு 153 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- சுகாதாரத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- தமிழ் வளர்ச்சித் துறைக்கு 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- அரசுப் பள்ளிகளில் பரிசோதனை கூடங்கள் அமைக்க 520 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- காவல்துறைக்கு 8876 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

- 4,997 விசைப்படகுகளில் 18 கோடி ரூபாய் செலவில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.

- கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்பு பிரிவு அமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 4,56,660 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.