3 பேரை திருமணம் செய்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு, 4 வதாக ஒருவர் வந்து சண்டைபோடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “மருதமலை” படத்தில் வரும் வடிவேல் காமெடி காட்சிகள் தற்போது, ராமநாதபுரத்தில் நிஜமாகி உள்ளது.

Woman marries 3 men but 4th man fights for child

ராமநாதபுரம் அருகில் உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், அந்த பகுதியில் கட்டிட வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, ஏற்கனவே திருமணமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த தகவல் அந்த பெண்ணின் கணவருக்குத் தெரிய வரவே, இது தொடர்பாகப் பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து, மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, கணவன் கைவிட்ட அந்த பெண்ணை ராமநாதபுரம் அழைத்து வந்து தனியாக குடும்பம் நடத்திய வினோத், சில மாதங்கள் கடந்த நிலையில், வெளிநாடு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், ஒரு சில மாதங்கள் பணமும் அனுப்பி உள்ளார். ஆனால், அடுத்த மாதமே அவர் வெளிநாட்டிலேயே இறந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது.

பின்னர், மனம் தளராத அந்த பெண், அடுத்த 4 மாதத்தில் 3 வதாக ஒரு மாற்றுத் திறனாளி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அந்த பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனிடையே, வெளிநாடு சென்று இறந்த வினோத்தின் உறவினர்கள் திரண்டு வந்து, அந்த குழந்தை வினோத்திற்குத் தான் பிறந்தது என்று கூறி பிரச்சனை செய்துள்ளனர். இதனால், அந்த குழந்தையை அவர்களிடம், அந்த அந்த பெண் கொடுத்து அனுப்பி உள்ளார்.

Woman marries 3 men but 4th man fights for child

இந்நிலையில், தன்னுடைய 8 மாத குழந்தையை, தாயே பணத்திற்கு விற்றுவிட்டதாக, 4 வதாக ஒரு நபர் (வேல்முருகன்), குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்குப் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த பெண்ணின் காதல் திருமண கதைகளைக் கேட்டு ஆடிப்போய் உள்ளனர். 

குறிப்பாக, வினோத் வெளிநாடு சென்ற இடைவெளியில், அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் 3 மாதங்கள் ஒன்றாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும், அதன் மூலமே இந்த பெண் கரு உற்றாள் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். 

Woman marries 3 men but 4th man fights for child

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்து குழப்பிப்போன அதிகாரிகள், குழந்தையை  காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு, குழந்தைக்கு உரிமை கோரும் தாயாரையும், 4 வது நபரையும் நீதிமன்றத்தை நாடி டி.என்.ஏ. பரிசோதனை செய்து கண்டு பிடிக்கச் சொல்லியும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, அந்த பெண் 2 வது முறையாக மீண்டும் கருவுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ண கட்டுதே... முடியல...