ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பண்டி என்னும் மாவட்டத்தில், 5 வயது சிறுமி, தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, அந்த பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதில், வலி தாங்க முடியாமல் உயிர் போகும் அளவுக்கு, வலியால் கத்தி கதறி உள்ளார். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, அந்த பகுதியில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது,சிறுமியின்உடலில்சில இடங்களில் ரத்தம் வந்துள்ளது.

இதனையடுத்து, அந்த காமுகன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய காமுகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.