குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்த பெண், அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குழந்தைகளை வைத்து, விதவிதமான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. 

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில், அதிக அளவிலான குழந்தைகளைப் பிச்சை எடுப்பாகப் புகார் எழுந்தது. 

இதனையடுத்து, குழந்தைகள் தொடர்பான குற்றத்தைத் தடுத்து நிறுத்துமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 Vellore woman arrested for begging with child

இந்நிலையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு  தொடர்பான விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று காலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, பெண் ஒருவர் கைக்குழந்தையுடன், அங்குப் பிச்சை எடுப்பதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், கடும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், நேராக அந்த பெண்ணிடம் சென்று அவரே விசாரித்துள்ளார். விசாரணையில், அந்த பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அங்கிருந்து குழந்தையை வாடகைக்கு எடுத்து வந்து பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, கை குழந்தையை மீட்ட ஆட்சியர், அந்த பெண்ணை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, அந்த பெண்ணை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, இதுபோன்று எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.