2 குழந்தைகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலாகவி மாவட்டம் ஹனுமபுரா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமவ் வதர் என்ற பெண், தனது கணவருடன் வசித்து வந்தார். 

தினசரி கூலி வேலை பார்த்து வந்த அவருக்கு 10 வயதில் கீர்த்தி என்ற பெண் குழந்தையும், 3 வயதில் ஸ்ராவணி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

woman suicide in karnataka with two children

இதனிடையே, வீட்டில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் கடும் மன உலச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில், தனது 2 பெண் குழந்தைகளையும் வீட்டிலிருந்து கூட்டிச் சென்ற அந்த பெண், அங்குள்ள குளத்தில் இருவரையும் தூக்கி வீசியுள்ளார். பின்னர், அவரும் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில், 3 பேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 பேரின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, 2 குழந்தைகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.