பெண்களை கேலி செய்தவரைத் தோப்புக்கரணம் போட வைத்த போலீசார் நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி பேருந்து நிலையத்தில் இன்று காலையில், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வதற்காகப் பெண்கள் ஏராளமானோர் அங்கு நின்றுகொண்டு இருந்தனர்.

cops make road Romeo to do sit up for eve teasing

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அங்கு நின்றுகொண்டிருந்த பெண்களை, கேலியும் கிண்டலுமாகச் செய்துகொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில், அந்த கிண்டல் எல்லை மீறிப்போகவே, அங்கிருந்த ஒரு பெண் அங்குள்ள காவல் நிலையத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த பெண் போலீசார், அந்த இளைஞரைப் பிடித்து, அதே இடத்திலேயே பொதுமக்கள் முன்னிலையில், தோப்புக்கரணம் போட வைத்து நூதன முறையில் தண்டனை கொடுத்தார். 

cops make road Romeo to do sit up for eve teasing

அத்துடன், தோப்புக்கரணம் போடும்போது இனிமேல் பெண்களை கிண்டல் செய்ய மாட்டேன் என்ற வாசகத்துடன் அவர் தோப்புக்கரணம் போட்டார். இதனை, அந்த வழியாகச் சென்றவர்கள் அனைவரும் பார்த்தனர். இதனை, சிலர் தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.