ஆந்திராவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திரா மாநில அரசின் சொகுசு பேருந்து ஒன்று,  விஜயவாடாவிலிருந்து குப்பம் என்னும் ஊருக்கு இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தது.

Chittoor bus accident 2 dead 50 injured

அதேபோல், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா செல்ல, திருப்பதி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று, எதிரே வந்துகொண்டிருந்தது.

அப்போது, 2 பேருந்துகளும் சித்தூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முற்பட்டபோது, திடீரென்று 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

விபத்து குறித்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், அந்த வழியாகச் சென்ற லாரியை நிறுத்தி, படுகாயம் அடைந்த அனைவரையும் அதில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர்களுக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.