மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதை இது! 

காமம், எதையும் செய்யத் துணியும் என்பதற்குச் சாட்சி இந்த காட்சியின் வழக்கு.

dad rapes 10 year old girl arrested Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த 39 வயதான குமார் தான், மகள் என்றும் பார்க்காமல் தன் 10 வயது சிறுமியின் கற்பை களவாடியிருக்கிறார்.

குமாரின் மனைவி, கடந்த 2017 ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவருடைய 10 வயது மகள், தந்தையுடன் தங்கி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறாள்.

இந்நிலையில், வேலைக்குச் செல்லும் குமார், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். அப்படி, குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார், வீட்டில் உள்ள 10 வயது மகளை, ஈவு இறக்கம் இல்லாமல், கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாவம், 10 வயது சிறுமி. அவளால் என்ன செய்ய முடியும். அழுவதை தவிர.. வலியைத் தாங்குவதைத் தவிர..

காம இன்பத்தில், மகளின் அழுகையையும், அந்த வலியால் கத்தி துடித்ததையும் கூட அவன் ரசித்திருப்பான்.

இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட சிறுமி, பள்ளியில் உள்ள தனது தோழியிடம் கூறியிருக்கிறாள். இதனையடுத்து, அந்த தோழி, வகுப்பு ஆசிரியரிடம் கூற, அவர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்துள்ளார்.

dad rapes 10 year old girl arrested Thanjavur

இதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தந்தையால், அந்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்ததில், அந்த சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.

பின்னர், சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம், குமார் இயற்கை மரணம் அடையும் வரை, ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது. அத்துடன், 1200 ரூபாய் அபராதம் விதித்தது.

மேலும், சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, தந்தையே தன்னுடைய 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, எய்ட்ஸ் நோயையும் கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.