மதுரையில் தினம் தினம் செக்ஸ் டார்ச்சர் செய்த கணவனின் ஆணுறுப்பில் தாக்கி ஆசிரியையான மனைவி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச் சேர்ந்த 34 வயதான சுந்தர் என்ற சுதீர், மதுவுக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

சுந்தரின் மனைவி அருள் செல்வி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குக் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு 5 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

இதனிடையே, சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அருள் செல்வி திருமங்கலம் அருகே உள்ள கீழ செம்பட்டி உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், சுந்தர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும், மது போதையில் வீட்டிற்கு வரும் சுந்தர், தன் மனைவிக்குத் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் கோபமடைந்த அருள் செல்வி, கணவரின் இந்த செயல்பாடு தொடர்பாகத் தனது சித்தி பாலாமணியிடம் கூறியுள்ளார். அப்போது, “இப்படிப்பட்ட கணவன் தேவையில்லை, அவனைக் கொன்று விடு” என்று பாலாமணி கூறியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, கடந்த 31 ஆம் தேதி இரவு வழக்கம் போல் சுந்தர் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து, மனைவியை தாம்பத்தியத்திற்கு அழைத்ததாகத் தெரிகிறது. அப்போது சித்தி பாலாமணி, சித்தியின் மகன் சுமேர் ஆகியோரை வீட்டிற்கு வரவைத்து, அவர்களது உதவியுடன் குடிபோதையில் இருந்த கணவர் சுந்தரின் ஆணுறுப்பில் தாக்கியும், அவரை அடித்து உதைத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய கணவர் கட்டிலிலிருந்து திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார் என்று கூறி, அவருடைய மனைவி, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சுந்தரை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு, சுந்தரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன், சுந்தரின் ஆணுறுப்பில் ரத்தக் கட்டு இருந்ததால் இறப்பில், சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, பிரேத பரிசோதனைக்குப் பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என்று அவரது உறவினர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாகத் திருமங்கலம் டி.எஸ்.பி. அருண் தலைமையில் காவல் துறையினர் சுந்தரின் மனைவி அருள் செல்வியிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், மனைவி அருள் செல்வி தனது சித்தி பாலாமணி, சித்தியின் மகன் சுமேர் ஆகியோருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து, மனைவி அருள்
செல்வியிடம் வாக்கு மூலம் பெற்றனர்.

இதனிடையே, தினம் தினம் செக்ஸ் டார்ச்சர் செய்த கணவனின் ஆணுறுப்பில் தாக்கி ஆசிரியையான மனைவியே, கணவனை கொலை செய்த சம்பவம் மதுரையில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.