சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து காணப்படும் நிலையில், தலைநகர் சென்னையில் அதன் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.

இதனால், சென்னையில் பரவும் கொரோனா தொற்றைத் தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இன்று மாலை அல்லது நாளைக்குள் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, “கொரோனா அதிகம் உள்ள சென்னையின் முக்கிய பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பைத் தாண்டி வெளியே சென்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்” என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவும் கொரோனாவை தடுக்கும் ஒரு முறைதான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.