நடு ரோட்டில் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத் அருகே இன்று காலையில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திடீரென்று விபத்துக்குள்ளாகி தலை குப்புறக்கவிழ்ந்தது.

இதனையடுத்து, விபத்துக்குள்ளான வாகனம்கவிழ்ந்த வேகத்தில், உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால், வாகனத்திலிருந்த எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக, அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது.

இதனால், சாலையில் இருபுறமும் நின்ற சில வாகனங்கள் மீதும் தீ பற்றி எரிந்தது.. இதனையடுத்து, அதிலிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் 4 புறங்களிலும் சிதறி ஓடினர். மேலும், இந்த விபத்து நடத்தப் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று அருகில் வந்து நின்றுள்ளது.

அப்போது, விபத்தைப் பார்த்ததும், வாகனத்திலிருந்த அனைத்து குழந்தைகளும் அதிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். இதனால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

பின்னர், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் வாகனம் முழுமையாக எரிந்து எலும்புக்கூடாகக் காட்சி அளித்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.