ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்காகத் தனது நிர்வாண படத்தை வெளியிட்டு பேரழி ஒருவர், நிதி திரட்டி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து, பயங்கரமான காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால், அங்குள்ள வனப்பகுதியில் வசித்து வந்த ஏராளமான உயிரினங்கள் அழிந்து வருகிறது.

Kaylen Ward raises fund for Australia with nude photos

இதனால், அந்நாட்டு அரசு காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் இந்த தீ விபத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தீயை உடனடியாக அணைக்காவிட்டால், உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 

முக்கியமாக, வனத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் அரியவகை தாவரங்கள் ஆகியவை முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அந்நாட்டுச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த கைலான் வார்ட் என்ற 20 வயதான இளம் மாடல் அழகி, கடந்த 4 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

Kaylen Ward raises fund for Australia with nude photos

அதில், “என்னுடைய நிர்வாண புகைப்படங்களைத் தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக, அவர்கள் 10 டாலர் எனக்கு அனுப்ப வேண்டும். இந்த பணம் முழுவதும் ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்டுப் பணிக்காகப் பயன்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதனையடுத்து, அடுத்த 2 நாட்களில் அவருக்கு 7 லட்சம் டாலர் வசூலானது. இந்த பணம் இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய் ஆகும்.

இது தொடர்பாக, மீண்டும் பதிவிட்ட அந்த இளம் மாடல் அழகி, தனக்கு நிதியாகக் கிடைத்த பணம் குறித்துப் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் இந்த நிதியைக் காட்டுத் தீ மீட்டுப் பணிக்குப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால், இது குறித்தும் தற்போது பதில் அளித்துள்ள அவர், கிடைத்த நிதியிலிருந்து எனக்காக நான் பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அவர், நம்பிக்கை இல்லாதவர்கள் நேரடியாக ஆஸ்திரேலியா அரசுகே பணம் அனுப்பிவிட்டு, அதற்கான ஆதாரத்தை மட்டும் தனக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Kaylen Ward raises fund for Australia with nude photos

உடம்பை விற்றுப் பிழைப்பு நடத்தும் சிலருக்கு மத்தியில், இயற்கையைக் காக்க தன் மானத்தைப் பற்றி கவலைப்படாத இளம் பெண் ஒருவர், தன் உடலையே மூலதனமாக ரசிகர்களுக்கு முதலீடாக்கி, அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் காட்டுத் தீ மீட்புப் பணிக்காகச் செலவிட முன்வந்துள்ளது ஒன்றும் அவ்வளவு சாதாரண விசயமல்ல. அது சிவப்பு கம்பளம் விரித்து, பாராட்ட வேண்டிய விசயம்.

இயற்கையைக் காக்க புறப்பட்ட புரட்சியில், தன் ஆடையைத் துறந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இவளே.. இந்த பிரபஞ்சத்தின் பேரழி!

அழகு போற்றப்படட்டும்..! இயற்கை காக்கப்படட்டும்..!!