சென்னையில் ஒரே நேரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவிகள், 4 பேர் மாயமாகி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடி காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100க் கணக்கான மாணவிகள் பயிற்று வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, பள்ளிச் சென்ற 10 ஆம் வகுப்பு பயிலும், 4 பள்ளி மாணவிகள், இரவு வீடு திரும்பவில்லை.

இதனால், இரவு முழுவதும் 4 மாணவிகளின் பெற்றோர்களும், மாணவிகளைத் தேடி அலைந்துள்ளனர். இதனையடுத்து, 4 மாணவிகளின் பெற்றோர்களும் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும், சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிக கூடும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும், போலீசார் மாணவிகளைத் தேடி அலைந்துள்ளனர்.

இதனையடுத்து, மாயமான மாணவிகளிடம் சக பள்ளித் தோழிகளிடம் இன்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் மூலம் மாணவிகள் எங்குச் சென்றுள்ளார்கள் என்று துப்பு துலங்கும் என்றும் போலீசார் நம்பி உள்ளனர்.

இதனிடையே, ஒரே நேரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயமான சம்பவம், ஆவடி பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.