உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,05,415 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,62,024 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ், உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவில் தான், உலகிலேயே மிகவும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,461 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1,03,330 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரேசில் நாட்டில் 4,38,812 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,764 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, ரஷ்யாவில் 3,79,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,142 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 2,84,986 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்க இதுவரை 27,119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், இங்கிலாந்தில் 2,69,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37,837 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 2,31,732 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் 33,142 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இப்படியாக, ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,05,415 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,62,024 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 25,79,691 ஆக அதிகரித்துள்ளது.