10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்களைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல், 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

1Oth Public Exam Release of Guidelines

இதனிடையே, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தி முடிக்கத் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி முதல், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. 

1Oth Public Exam Release of Guidelines

அதன்படி, 

- வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தத் தேவையில்லை.

- வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாகத் தேர்வு எழுத அனுமதி. 

- வெளியூரில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களைத் தனி அறையில் அமர வைக்க வேண்டும். 

- மாணவர் விடுதிகளை ஜூன் 11 ஆம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.

- தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.