உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,88,782 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,57,425 ஆக அதிகரித்துள்ளது.

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உலக வல்லரசான அமெரிக்கா திகழ்கிறது. 

coronavirus death toll 3.57 lakh worldwide

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 17,45,803 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மிகச் சரியாக, அமெரிக்காவில் 1,02,107 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், அமெரிக்காவில் கொரோனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,90,130 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பிரேசில் நாட்டில் 4,14,661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,697 ஆக உயர்ந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டில் 2,83,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 27,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், ஜெர்மனியில் 1,18,895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,533 ஆக உயர்ந்துள்ளது.

coronavirus death toll 3.57 lakh worldwide

இத்தாலியில் 2,31,139 பேரும், ரஷ்யாவில் 3,70,680 பேரும், துருக்கியில் 1,59,797 பேரும், ஈரானில் 1,41,591 பேரும் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,88,782 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,57,425 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல், உலகம் முழுவதும் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 24,97,593 ஆக உயர்ந்துள்ளது.