உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், உலகையே முடக்கிப்போட்டு அதிகாரம் செய்து வருகிறது. உலக நாடுகளிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலகிலேயே அதிகபட்சமாக உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் தான், மிக அதிகபட்சமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,255 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,20,902 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 96,354 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 382,169 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில், இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக அமெரிக்கத் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

பிரேசில் நாட்டில் கொருானா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3 வது நாடாக பிரேசில் தற்போது மாறியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,34,092 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,78,561 ஆக அதிகரித்துள்ளது.