செலவினங்களைக் குறைக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதித்து, தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது.  

கொரோனவால் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலை சீராக்க செலவினங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Cost Cutting Measures in TN Govt

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் மிகப் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக யோசித்து வருகிறது.

அதன் ஒரு நடவடிக்கையாகத் தமிழக அரசின் நிதி சிக்கலை சீராக்கும் வகையிலும், அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “அரசு செலவிலான தவிர்க்க அதிகாரிகளுக்கு விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக” அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “விளம்பரச் செலவுகளை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தல்” வழங்கி உள்ளது. 

அதேபோல், “சால்வைகள், பூங்கொத்துகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மேஜை நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும்” என்றும், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

Cost Cutting Measures in TN Govt

அத்துடன், “மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும், ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதிக்கப்படும்” என்றும், தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்பாக, “அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும்” தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.