கொரோனா நன்மையும் செய்யும் என்று சொன்னால், நம்மால் நம்ப முடிகிறதா? கொரோனா ஊரடங்கால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

கொரோனா வைரஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சீனாவில் உருவாகி மற்ற உலக நாடுகளுக்குப் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில், சீனா தொடங்கி மற்ற ஒவ்வொரு உலக நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஊரடங்கை அமல் படுத்தியது.

Benefits of Lockdown environment

ஊரடங்கு காரணமாக, உலகின் அனைத்து நாடுகளும் அத்தியாவசியப்பொருட்கள் தவிர்த்து, அனைத்துவிதமான உற்பத்திக் கூடங்களையும் மூடியது.

இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு சுற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏப்ரல் மாதத்தில் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் மிகப்பெரிய அளவு குறைந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது

Benefits of Lockdown environment

ஒரு மாதம் முழுவதும் உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் வாகனங்கள், தொழிற்சாலைகள் இயங்காத போதும், 17 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்திய நாடுகளில் ஏப்ரல் மாதத்தில் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 26 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. பிரிட்டனில் 31 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 28 சதவீதமும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

Benefits of Lockdown environment

தினசரி கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக அமெரிக்காவில் 4 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் 2.1 சதவீதம் குறைந்துள்ளது. 

இந்தியாவில் தினசரி கார்பன் வெளியேற்றம் 1.7 சதவீதம் நிறுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில், மிகக்குறைவாக 0.2 சதவீதம் மட்டுமே தணிந்திருக்கிறது. இவை தவிர்த்துப் பிற உலக நாடுகளில் 5.5 சதவீதமும், உலக அளவில் தினசரி சராசரி 13.6 சதவீதமும் குறைந்துள்ளது.

Benefits of Lockdown environment

விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால், அதன் மூலம் 60 சதவீதம் கார்பன் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்கள் இயங்காததால் 36 சதவீதமும், மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் இயங்காததால் 86 சதவீதம் கார்பன் வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலை நீடித்தாலும் உலக அளவில் இந்த ஆண்டில் கார்பன் டை ஆக்சைடு வெற்றியேற்றம் சராசரியாக 7 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, உலக சுற்றுச்சூழலுக்கு பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது. 

அதேபோல், புவி வெப்ப மயமாதலைத் தடுக்க இதைவிட மிகக் கடுமையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தேவை என்பதையும் கொரோனா ஊரடங்கு உணர்த்தி இருப்பதாக உலக சுற்றுச்சுழல் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.