உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,82,660 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,29,294 ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே ஆட்டி படைத்து வருகிறது கொரோனா என்னும் பெரும் தொற்று. கொரோனா தொற்று பரவி சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் எல்லாம் திணறி வருகிறது.

coronavirus death toll 3.29 lakh worldwide

இதனிடையே, கொரோனாவுக்க உலகிலேயே அதிகபட்சமாக உலக வல்லரசான அமெரிக்கா தான் மிகப் பெரிய பாதிப்பையும், இழப்பையும் சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94,994 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அந்நாட்டில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலியில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus death toll 3.29 lakh worldwide

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,82,660 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,29,294 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,20,157 ஆக உயர்ந்துள்ளது.