உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் பரவி, இன்று உலகையே ஆட்டிப்படைக்கிறது கொரோனா என்னும் உயிர்க்கொல்லி வைரஸ். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து உலக நாடுகளும் மிகப் பெரிய அளவில் திணறி வருகிறது.

இதனால், அனைத்து உலக நாடுகளும் சொல்லி வைத்தார் போல், ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பல நாடுகளில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் மே மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா வைரஸ் பரவலை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், கொரோனா என்னும் கொடிய நோய் வீரியம் பெற்று தற்போது மேலும் அதிக அளவில் பரவி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதே நேரத்தில் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

உலக வல்லரசு நாடானா அமெரிக்காவில் மட்டும் சுமார் 3.36 லட்சம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 9,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Bronx Zoo வில் உள்ள புலிக்கு கொரனோ பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில், கொரோனாவால் இதுவரை 12,641 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 128,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் மட்டும் இதுவரை 15,887 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.