தமிழகத்தில் சிவப்பு மண்டலத்திலிருந்து 4 மாவட்டங்கள், ஆரஞ்சுக்கு மாறியுள்ளது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுக்கும் விதமாகப் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாகவும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள் ஆரஞ்ச் மண்டலமாகவும், பாதிப்பே இல்லாத பகுதிகள், பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 26 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 11 மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்திலும் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சிவப்பு மண்டலத்திலிருந்து 4 மாவட்டங்கள், ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி உள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலிருந்து, ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளன. இதனால், அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவாத வகையில், தடுப்பு கண்காணிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், வெளி மாவட்டத்திலிருந்து பொதுமக்கள் யாரும் அந்த மாவட்டத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படாமல், எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

அதேபோல், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த ஈரோடு மாவட்டத்தில், தற்போது யாருக்கும் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.