கொரோனா வைரசின் 6 புதிய அறிகுறிகள் தொடர்பாக, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் நிலையில், இன்னும் அதற்கு மருந்து கண்டுப்பிடிகக்வில்லை. ஆனால், தொடர்பான பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 Corona virus New 6 Symptoms - central govt

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தொடர்பாக, காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய 3 அறிகுறிகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரசின் 6 புதிய அறிகுறிகள் தொடர்பாக, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நுகர்வுத்தன்மை இழத்தலும், சுவையை உணராமையும், கொரோனா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக, மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் அதிகராப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், குளிர்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போகுதல் ஆகியவை கொரோனாவின் புதிய அறிகுறிகள் என்று, மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் பட்டியலிட்டுள்ளது.

 Corona virus New 6 Symptoms - central govt

முன்னதாக, நுகர்வுத்தன்மை இழத்தலும், சுவையை உணராமையும் கொரோனா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகள் என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, மத்திய அரசு தற்போது கூறியுள்ளது.

இதுபோல், கண்கள் சிவந்து போவதையும் கொரோனா அறிகுறியாகக் கண் மருத்துவர்கள் கருதுகின்றனர். மெட்ராஸ் ஐ அல்லது கண் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளுடன் வருவோரையும், கொரோனா தொற்று அபாயம் உடையவர்களாகவே கருதி எச்சரிக்கையுடன் அணுகுவதாகவும் இந்திய கண் மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதனால், கொரோனா வைரஸ் பற்றிய பீதி, பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.