சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில், நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

சென்னை, கோவை, மதுரையில் கடந்த 26 ஆம் தேதி காலை முதல், இன்று இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

Allow shops to open until 5pm tomorrow only

இந்நிலையில், இன்று இரவுடன், அந்த முழுமையான ஊரடங்கு முடிவதால், நாளை ஒரு நாள் மட்டும், இந்த குறிப்பிட்ட 3 மாநகராட்சிகளில் கடைகள் திறக்க சிறப்பு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில், காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Allow shops to open until 5pm tomorrow only

குறிப்பாக, “மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொதுமக்கள் அனைவரும் பொறுமையாகப் பொருட்களை வாங்கலாம்” என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

மே 1 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், பழைய நடைமுறையான காலை 6 மணி முதல், மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கும் நேரக் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.