“மனைவியின் அனுமதியின்றி அவரது செல்போன் உரையாடலை பதிவு செய்வது மனைவியின் தனியுரிமையை மீறும் செயல்” என்று, உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, பெண் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு “கணவர் கொடுமைப்படுத்தவதாக” கூறி, நீதி கேட்டு பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதே நேரத்தில், மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு அந்த பெண்ணின் கணவன், அங்குள்ள பதிண்டா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது, “மனைவிக்கும் - கணவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடலை பதிவு செய்து கொள்ளலாம் என்று, ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், இந்து திருமண சட்டம் 1955, பிரிவு 13 ன் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான், இது தொடர்பான முந்தைய நீதிமன்ற உத்தரவை பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

அதாவது, இந்த வழக்கு விசாரணையின் போது, “மனைவி உடன் நடந்த செல்போன் உரையாடலை, அந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முயன்று உள்ளார்.

அப்போது, அந்த கணவனின் முயற்சிக்கு, அவரது மனைவியின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதற்கு விளக்கம் அளித்த அந்த கணவர் தரப்பு வழக்கறிஞர், “சம்பந்தப்பட்ட பெண், குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரம் அவரது செல்போன் உரையாடலில் உள்ளதாகவும், இதனை குடும்ப நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும்” குறிப்பிட்டு பேசினார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி லிசா கில் தலைமையிலான அமர்வு, “பொதுவான சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதாகவும், செல்போன் உரையாடல் அடங்கிய சிடியை விசாரணைக்கு ஏற்க முடியாது” என்றும் உறுதிப்படத் கூறிவிட்டார்.

அத்துடன், “மனைவியின் அனுமதியின்றி அவரது செல்போன் உரையாடலை பதிவு செய்வது என்பது தனியுரிமை மீறல்” என்றும், நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால்,

குறிப்பாக, இது தொடர்பான முந்தைய நீதிமன்ற உத்தரவை பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கூறிய கருத்துக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.