“கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5 வது வழக்கிலும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி” என்று, தீர்ப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் அவர் ஏற்கனவே குற்றவாளி” என்று நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவருக்குத் தண்டனையும் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

இதனால், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தண்டனைப் பெற்று வந்த நிலையில், தற்போது அவரது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் தான், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது 5 வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது.

அதாவது, அவர் முதலமைச்சராக இருந்த போது, தோரந்தா கருவூலத்தில் இருந்து 139 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பான ஒரு வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பிலும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அத்துடன், “இந்த வழக்கில் மொத்தம் 75 பேர் குற்றவாளிகள்” என்றும், நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், “இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள லாலு பிரசாத் யாதவ் உள்பட 39 பேருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்களை வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும்” என்றும், நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

அதே போல், “35 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்” நீதிமன்றம் அதிரடியாக விதித்து உள்ளது.

இப்படியாக, நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் அம்மாநில முன்னாள் எம்.பி ஜெகதீஷ் ஷர்மா மற்றும் அப்போதைய பொது கணக்கு குழு தலைவர் துருவ் பகவத்” ஆகியோர்கள் இந்த வழக்கின் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5 வது வழக்கிலும், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி” என்று, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது, அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.