வெளியானது சர்கார் அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாட்டம்
By Vinesh RV | Galatta | September 20, 2018 18:12 PM IST
வரும் தீபாவளியன்று விஜய்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் அறிவிப்பை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று சன் பிக்சர்ஸ் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு நேயர்கள் 250 பேருக்கு சர்கார் இசை வெளியிட்டு விழாவை நேரில் காண கான்டெஸ்ட் நடத்தப்படுகிறது.
Here’s your chance to win an invitation to the #Sarkar Audio Launch along with a Two-Way Flight ticket to Chennai FREE and Rs.2000 for travel expenses. Watch the video for further details : https://t.co/wrIl6ABTks
— Sun Pictures (@sunpictures) September 20, 2018
#SarkarAudioLaunchContest #SarkarKondattam
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2ம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.