சென்னை 600028, சரோஜா, தமிழ்படம், கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹாரர் காமெடி படமான இடியட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. முன்னதாக சிவா நடித்த நகைச்சுவை திரைப்படம் சுமோ ரிலீசுக்கு காத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 1970களில் சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக விரைவில் ரிலீஸாக இருக்கும் காசேதான் கடவுளடா படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவா, யோகி பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சலூன் மற்றும் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள கோல்மால் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் மிர்ச்சி சிவாவின் அடுத்த நகைச்சுவை சரவெடியாக தயாராகி வரும் திரைப்படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் டிப்ஸ் தமிழ் இணைந்து வழங்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தை இயக்குனர் விக்னேஷ் ஷா.P.N எழுதி இயக்கியுள்ளார்.

சிவாவுடன் இணைந்து கதாநாயகிகளாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடிக்க,பாடகர் மனோ, மா கா பா ஆனந்த், பக்ஸ், ஷா ரா,  KPY பாலா, திவ்யா கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்தர்.K.வில்சன் ஒளிப்பதிவில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார் இந்நிலையில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. கலக்கலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…