இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் நடிகராகவும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

மேலும் இசையமைப்பாளராக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் மற்றும் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தனுஷ் நடிக்கும் வாத்தி கார்த்தியின் சர்தார், அருண்விஜயின் யானை, விஷாலின் மார்க் அண்டனி மற்றும் லாரன்ஸின் ருத்ரன் உள்ளிட்ட படங்களுக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபல் படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து வருகிறார். முன்னதாக ஜீவி நடித்து நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ஐயங்கரன். இயக்குனர் ரவியரசு இயக்கத்தில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தை காமன் மேன் நிறுவனம் சார்பில் B.கணேஷ் தயாரித்துள்ளார்.

ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெறடி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் நாளை (மே 5-ஆம் தேதி) ரிலீசாகவுள்ள ஐங்கரன் படத்திலிருந்து உயிரினும் உயர்ந்த எனும் பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…