உலகமே கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி சென்றுகொண்டு உள்ளது என மருத்துவ உலகம் கவலை தெரிவித்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர், தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தியிருக்கிறார்.
தற்போது அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை,கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்துள்ளதாகச் கண்டுபிடித்துள்ளனர். 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியது,‘’தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்புச்சக்தியானது, தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து குழந்தைக்குச் சென்று இருக்கும் என்று கணித்து இருக்கிறோம். ஆனால் இதுமிகவும் அதிர்ஷ்டவசமாக அமைந்தது. நாங்களே இதை எதிர்பார்க்கவில்லை.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு சில வாரங்களில் குழந்தை பிறந்து இருப்பதால், இந்த நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் மற்றும் நோய்க்கிருமியிடமிருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.” என்றுள்ளனர்.