உலகிலேயே அதிகமான காலம் தனிமையில் வாழ்ந்த யானை என அழைக்கப்பட்டது காவன் என்ற யானை. இந்த யானை முதலில் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த ஒரே ஆசிய யானை என்பதால்  நீண்டகாலம் மர்காசர் உயிரியல் பூங்காவில் மக்களுக்கு வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே காவன் இருந்து வந்தது. 

காவனின் மனசோர்வை உணர்ந்து, 2009ல் சாஹேலி என்ற பெண் யானை அதனுடன் சேர்க்கப்பட்டது. அந்த பெண் யானையும் தார்க்குச்சியின் கம்பியால் ஏற்பட்ட ஆழமான காயத்தால் இறந்து போக, கடந்த 8 ஆண்டுகளாக மீண்டும் காவனுக்கு தனிமை திணிக்கப்பட்டது. யாரையும் பார்க்காமல் தனக்கு அருகில் இருக்கும் சுவரில் முட்டி நின்றவாறே துயரத்தில் நாட்களை கடத்திக்கொண்டு வந்தது காவன். 


காவனின் தனிமை கதையையும் மன சோர்வையும் அறிந்துக்கொண்ட அமெரிக்க பாடகரும், நடிகையுமான சேர், சர்வதேச விலங்குகள் நல அமைப்பு மற்றும்  ஃபோர் பாஸ் இன்டர்நேஷனல் எனும் விலங்குகள் நல அமைப்பு  ஆகியோரின் எடுத்த தீவிர முயற்சியால், காவனை பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காவனுக்கு ஜோடியும் கிடைந்து இருக்கிறது. 24 ஆண்டுகளுக்கு மேல் தனிமையில் வாழ்ந்து வந்து, தற்பொழுது கம்போடியா சென்ற காவன் யானைக்கு மன சோர்வும், தனிமையும் நீங்கி ஜோடியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.