நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜனவரி 20-க்கு மேல் அவர் பதவி ஏற்க இருக்கிற உள்ளார்.  டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது என்று கூறி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


நவம்பர் 3ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களையும், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் 232 தேர்தல் சபை உறுப்பினர்களையும் பெற்றனர்..  


இதைப்பற்றி பைடன், ‘’ ட்ரம்ப் இப்படி தோல்வியை ஏற்க மறுத்து நடந்துகொள்வது எனக்கு சங்கடத்தை தருகிறது. மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனநாயகம் தள்ளப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது. ஜனநாயகம் உண்மையானது மற்றும் வலிமையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது .” என்றும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.


ட்ரம்ப் தொடர்ந்த வழக்கு இன்னும் முடிவுறாத நிலையில், தேர்வுகுழுவின் இந்த அறிவிப்பை எதிர்த்து கண்டங்களை தெரிவித்து இருக்கிறார் ட்ரம்ப் . அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான மாற்றுத் தேர்தலுக்கு சபை நடவடிக்கைகளை டிரம்ப் அணி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்பதால் தேர்வுகுழு ஜோ பைடனை அதிகாரப்பூர்வமாக அதிபர் என்று அறிவித்து இருக்கிறது.