சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் விஸ்வாசம்.

இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை திரையரங்கில் கண்டுகளித்த ரசிகர்களின் வீடியோ தொகுப்பை ட்விட்டரில் வெளியிட்டனர் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ். தகப்பன் மகள் இடையே உள்ள பாசத்தை, தனது படைப்பின் மூலம் ரசிகர்களுக்கு எடுத்துரைத்த இயக்குனர் சிவாவை பாராட்டியுள்ளனர்.