சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் விஸ்வாசம்.

இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் காட்சிகள் உருவான விதம் குறித்த வீடியோவை பதிவு செய்திருக்கின்றனர் விஸ்வாசம் படத்தின் படக்குழுவினர். நடிப்பு, ஸ்டண்ட், டான்ஸ் போன்ற அனைத்து காட்சிகள் உருவானது எப்படி என்று பதிவு செய்திருக்கின்றனர்.