சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் கேசவன் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் சின்ன NS கலைவானர் விவேக்.

தற்போது ட்விட்டரில், வானே வானே பாடலை பகிர்ந்ததுடன், இமானின் இசை டச்சிங்காக உள்ளது என பாராட்டியுள்ளார். மேலும் அஜித் மற்றும் நயன்தாராவின் on-screen கெமிஸ்ட்ரி பாடலுக்கு உயிர்தந்துள்ளது என்று கூறியுள்ளார்.