பிக்பாஸ் வீட்டில் பொங்கலுக்கு சண்டையா ?
By Sakthi Priyan | Galatta | June 25, 2019 11:03 AM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெளியான ப்ரோமோவில் வனிதா மற்றும் சாக்ஷி அகர்வால் இடையே சண்டை நடப்பது போல் தெரிகிறது. பொங்கல் பிடிக்காதா அல்லது ஒத்துக்காதா என்று கேள்வியை எழுப்புகிறார் வனிதா. மேலும் இந்த ப்ரோமோவில் சாக்ஷிக்கு ஆறுதல் கூறுகிறார் கவின்.