ஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் திரை விரும்பிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் A1- அக்யூஸ்ட் நம்பர் 1. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்த தாரா அலிஷா நடிக்கிறார். 

Update On Santhanams A1 Movie Release Date

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி அசத்தியது. இதைத்தொடர்ந்து முதல் பாடலான சிட்டுக்கு சிட்டுக்கு லிரிக் வீடியோ வெளியானது.

Update On Santhanams A1 Movie Release Date Update On Santhanams A1 Movie Release Date

படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை 18ரீல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. சந்தானம் நடிக்கும் டகால்டி படத்தின் தயாரிப்பு நிறுவனம் என்பது கூடுதல் தகவல். தற்போது வெளியாகிய தகவல் என்னவென்றால், ஜூலை 26-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறதாம்.