தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் என்பதை கடந்து ரசிகர்களின் உடன்பிறவா அண்ணன் எனும் அந்தஸ்த்தை பெற்றவர் நடிகர் விஜய். தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Thalapathy Vijay Saying Hi From The Sets Of Thalapathy Sixty Three Sets

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

Thalapathy Vijay Saying Hi From The Sets Of Thalapathy Sixty Three Sets

படத்தின் படப்பிடிப்பு SRM கல்லூரியை தொடர்ந்து ராயப்பேட்டை மற்றும் கிண்டியில் நடந்து வருகிறது என்ற செய்தி வெளியாகியது.

Thalapathy Vijay Saying Hi From The Sets Of Thalapathy Sixty Three Sets

தற்போது படப்பிடிப்பு தளத்தில் திரண்ட ரசிகர்களை நோக்கி தளபதி விஜய் கையசைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற சட்டை ஜீன்ஸ் என அசத்தலான கெட்டப்பில் இருக்கிறார் தளபதி. படப்பிடிப்பு தளத்தில் மாடுகள் இருப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.