பிகில் படத்தின் முதல் பாடல் ! மகிழ்ச்சி மழையில் தளபதி ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | July 23, 2019 22:13 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.பெண்மையை போற்றும் வண்ணம் விவேக்கின் வரிகளில் சிங்கப்பெண்ணே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்