தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். சமீபத்தில் நடிகர் யோகிபாபு, கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி நடிப்பது உறுதியாகிவிட்டது.

Thalapathy Sixty Three Intro Song Sung By Simtangaran Fame Bamba Backya

தற்போது படத்தின் இன்ட்ரோ பாடலை சிம்டங்காரன் புகழ் பம்பா பாக்யா பாடியுள்ளார் என்ற செய்தி நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் தளபதி விஜய் ஏதாவது பாடல் பாட வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.