தமிழ் திரையின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். 

Thalapathy Sixty Four Gets A New Update To Be Directed By Maanagaram Fame Lokesh Kanagaraj

அட்லீ இயக்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். தளபதி விஜயின் அடுத்த படத்தை மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் செய்தி தெரிய வந்தது.

Thalapathy Sixty Four Gets A New Update To Be Directed By Maanagaram Fame Lokesh Kanagaraj

விஜயிடம் மேலும் சில இயக்குனர்கள் கதை கூறியிருந்தாலும், லோகேஷ் கனகராஜின் பெயர், பட்டியலில் முதலில் இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிக்கும் கைதி படத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Thalapathy Sixty Four Gets A New Update To Be Directed By Maanagaram Fame Lokesh Kanagaraj

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு 50 நாட்களில் முடிக்கப்படுமாம். அதுமட்டுமல்லாமல் 2020-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்ற சிறப்பு செய்தியும் வெளியானது.ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.

Thalapathy Sixty Four Gets A New Update To Be Directed By Maanagaram Fame Lokesh Kanagaraj

தற்போது வெளியான செய்தி என்னவென்றால், தளபதி 64 படத்தை இயக்குனர் சினேகா பிரிட்டோவின் தந்தை B விமல் தயாரிக்கவுள்ளார். ரசிகன், செந்தூர பாண்டி, தேவா போன்ற படங்களை தயாரித்தவர் இந்த படத்தையும் தயாரிக்கவிருக்கிறார்.